லங்காவியில் பிரதமர் மகாதிருடன் நடந்த ஒரு சந்திப்பில் அவருடன் தகராறில் ஈடுபட்ட வாடகைக்கார் ஓட்டுனர்கள் நாசவேலைக்காரர்களாக இருக்கலாம் என்று டெக்சி சங்கம் கூறிக்கொண்டது.
மகாதிருடன் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்து வெளிநடப்பு செய்தவர்கள் அச்சங்கத்தின் (பெர்ஜிவா) உறுப்பினர்கள் அல்ல என்று அதன் தலைவர் ஜய்லானி இசாய்சுலுடின் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் தகராறு செய்வதற்கு சில தரப்பினரால் அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் பெர்ஜிவா உறுப்பினர்கள் என்பதை நான் நிராகரிக்கிறேன். அவர்களை எனக்குத் தெரியவே தெரியாது என்று ஜய்லானி கூறினார். ஜய்லானி புக்கிட் பிந்தாங் பெர்சத்து தலைவருமாவார்.
பெர்ஜிவா மகாதிரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் ஜய்லானி மேலும் கூறினார்.
இந்த வெளிநடப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவும் மகாதிர் முன்வந்தார்.