அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு பரவலாக நிலவிய ஊழல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, மக்கள் இப்போது ஊழல் பற்றிப் பேசுவதே இல்லை என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
ஏனென்றால், ஏதோ காரணத்துக்காக அரசாங்கத்தை அணுகும் பொதுமக்களும் நிறுவங்களும் வணிகர்களும் ஊழல் பற்றிய அச்சமின்றிப் பேச்சு நடத்த முடிகிறது.
“இப்போது நிறுவனங்களும் வர்த்தகர்களும் அரசாங்கத்தில் ஊழல் நிலவுவதாகப் பேசுவதையோ புகார் செய்வதையோ நாம் கேட்க முடிவதில்லை. வெளிநாடு சென்றால்கூட அங்கும் யாரும் அது பற்றிக் குறிப்பிடுவதில்லை.
“இதற்கெல்லாம் காரணம், நாங்கள் ஆட்சி வந்தபோதே ஊழலையும் கட்டுப்படுத்தி விட்டோம்”, என்றார்.
அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் ஒளியேறிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் மகாதிர் அவ்வாறு கூறினார்.