பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாளை தொடங்கி தாய்லாந்துக்கு இரண்டு-நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார்.
மகாதிர் மே 10-இல் பிரதமான பின்னர் தம்மை அண்டை நாடுகளுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளும் முகமாக பயணங்கள் மேற்கொண்டு வருகிறார் என்றும் அதில் ஒரு பகுதிதான் இவ்வருகை என்றும் வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் கூறிற்று.
மகாதிர் தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிராயுட் சான் -ஓ-சாவைச் சந்திப்பார் அரசாங்க விருந்துபசரிப்பில் கலந்து கொள்வார்.
இவ்வருகை இருநாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைபையும் வலுப்படுத்தும் என்றது சொன்னது.