சனிக்கிழமை நடந்த மலாக்கா பிகேஆர் தேர்தல் குறித்து 10 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் ராஜா ஷாரோம் ராஜா அப்துல்லா கூறினார்.
அந்தப் பத்தில் நான்கு மலாக்கா தெங்கா மாவட்டத்திலும் ஆறு அலோர் காஜா மாவட்டத்திலும் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
மின்வாக்களிப்பு முறையிலும் தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதாலும் அதிருப்தி அடைந்தவர்கள் அப்புகார்களைச் செய்துள்ளனர் என ராஜா ஷாரோம் தெரிவித்தார்.
“தாங்கள் தகுதி வாய்ந்த கட்சி உறுப்பினர்கள் என்றும் ஆனால் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைக் காணவில்லை என்றும் கூறிக்கொண்டு சிலர் புகார் செய்துள்ளனர்.
“புகார்களில் குற்றச்செயல்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படவில்லை என்பதால் புகார்களை பிகேஆர் தலைமையகத்திடமே மேல்நடவடிக்கைக்காக ஒப்படைத்து விட்டோம்”, என்றாரவர்.