வன்முறையைத் தவிர்க்க இந்து குழந்தைகளுக்கு ஆன்மீக நன்னெறி போதனை, சமயத் தலைவர்கள் முடிவு

இந்து சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனைவருக்கும் ஏழு வயது முதல் பன்னிரண்டு வயதுக்குள் தீட்சை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் புத்ராஜெயாவில் கூடிய இந்து சமய அமைப்புகளின் தலைவர்கள் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனர்.

சமயத் தெளிவு, ஆன்மீக நன்னெறியுடன் பெற்றோரின் வழிகாட்டலும் போதிய அளவு இருந்தால் நம் இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல  மாட்டார்கள்அத்துடன் பாரம்பரிய பெருமைமிக்க இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் நாம் என்ற உயர்வான எண்ணம் அவர்களிடம் குடிகொண்டிருந்தால்,  வாழ்வில் தவறாமல் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள்இதற்கெல்லாம் தீர்வு காணஇளம் பருவத்திலேயே நம் பிள்ளைகளுக்கு தீட்சை கொடுக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம்இந்து தர்ம மாமன்றம், மலேசிய நால்வர் மன்றம்அர்ச்சகர் சங்கம்ருத்ரா சமாஜ் உள்ளிட்ட முப்பது இந்து அமைப்புகளின் தலைவர்களும் பொறுப்பாளர்களும் கூடிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இறைவழிபாட்டுடன் மாதாபிதா-குரு-தெய்வம் என்னும் ஆன்மீக அரிச்சுவட்டின் அடிப்படையில் பெற்றோருக்கும் பெரியவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்; பெரியவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற பண்பு நலனெல்லாம் அவர்களுக்கு இளம் பிராயத்திலேயே போதிக்கப் பட வேண்டும்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் வன்முறையைக் களைவது குறித்தும் அவர்களுக்கு ஆன்மீக நன்னெறி போதிப்பது பற்றியும் ஆலோசனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில்ஆலய வழிபாட்டுடன் வீட்டிலும் பெற்றோருடன் சேர்ந்து அன்றாடம் இறை வழிபாடு செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர்தான் முதல் ஆசிரியர் என்பதால்அவர்களும் சமயத் தெளிவு பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான்பெற்றோரே தத்தம் பிள்ளைகளுக்கு சமயத் தெளிவு அளித்து அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்றெல்லாம் ஆலோசனை தெரிவித்தனர்.

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தலைமையில் ‘வன்முறையத் தவிர்க்க ஆன்மீக நன்னெறியைத் துணை கொள்வோம்’ என்னும் கருப்பொருளுடன் அக்டோபர் 21-ஆம் நாள் அவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்இந்திய சமுதாயத்தின் எதிர்காலத் தலைமுறையினர், குற்றம் அற்றவர்களாகவும் சுற்றம் காப்பவர்களாகவும் விளங்க அனைவரும் ஒன்றிணைந்து இனி செயல்படுவோம் என்று ஒன்றாக உறுதி ஏற்றனர்.

  • நக்கீரன்