புத்ரா ஜெயாவிடம் நிதியுதவி கேட்டு கிளந்தான் அரசு எழுதிய கடிதத்தை வெளியிட்ட நிதி அமைச்சர் லிம் குவான் எங்கைக் கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியான் கண்டித்தார்.
டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் டான், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டாக இருந்தால் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார் என்றார்.
“அமைச்சரவை இதைக் கடுமையாகக் கருத வேண்டும். மாநிலங்களுக்கும் புத்ரா ஜெயாவுக்குமிடையிலான கடிதத் தொடர்புகளை இப்படி வெளியிடுவது சரியா?
” பிரதமர்(மகாதிர்) அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை இப்படியெல்லாம் வெளியிட மாட்டார். மாநிலங்களுக்கும் கூட்டரசு அரசாங்கத்துக்குமிடையில் நம்பிக்கையைக் காப்பது முக்கியம்.
யாருக்கு ஆதரவாகவும் பேசவில்லை என்று குறிப்பிட்ட டான், லிம்மின் செயல் “முற்றிலும் தவறானது” என்றார்.