இன்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவருடன் முன்னாள் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகர் அப்துல்லாவும் குற்றம் சாட்டப்படுகிறார்.
அவர்கள் இருவரும் அபு டாபி-ஐ தளமாகக் கொண்ட இன்டர் நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திற்கு 1எம்டிபியிலிருந்து நிதி அளித்தது சம்பந்தமாக குற்றம் சாட்டப்படுவர்.
மேலும், இன்று நீதிமன்றத்தில் முன்னாள் உளவுத் துறை தலைவர் ஹஸானா அப்துல் ஹமிட் மீதும் நம்பிக்கை மோசடி பற்றிய குற்றச்சாட்டு சுமத்தப்படும்.