ஒரு செய்தி அறிக்கையின்படி, அதிகமான பிஎன் தலைவர்கள் நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுவர் என்று பிரதமர் மகாதிர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் ஊழல், அதிகார அத்துமீறல் மற்றும் இதர குற்றச் செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராக பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தாய்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மகாதிர் கூறினார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஒன்பது ஆண்டுகால தலைமையத்துவத்தின் கீழ் மலேசியா துன்பத்தை அனுபவித்துள்ளது என்று மகாதிர் கூறினார்.
மக்களை அலட்சியப்படுத்தியதோடு குற்றங்கள் புரிந்துள்ளது என்று அவர் முந்தைய நிருவாகத்தின் மீது குற்றம் சாட்டினார்.
இதர தனி நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மகாதிர், அதிகமான தனி நபர்களை ஒரே சமயத்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்றாரவர்.
“நாம் அதை ஒவ்வொன்றாகச் செய்வோம் மற்றும் முன்னாள் பிரதமர் (நஜிப்) மீது கவனம் செலுத்துவோம்”, என்று மகாதிர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி கூறுகிறது.
பிரதமர் மகாதிர் தாய்லாந்துக்கு இரண்டு நாள் வருகை மேற்கொண்டுள்ளார்.