யுஎஸ்$250-மில்லியன்(ரிம1 பில்லியன்) பெறுமதியுள்ள சொகுசு கப்பலான இக்குவானிமிடி ஏலம் விடப்படுகிறது. அக்டோபர் 29, திங்கள்கிழமை தொடங்கி நவம்பர் 28வரை ஏல விற்பனை நீடிக்கும்.
கப்பலை ஏலத்தில் எடுக்க விரும்புவோர் யுஎஸ்$1மில்லியனை வைப்புத் தொகையாக செலுத்தியாக வேண்டும் என 1எம்டிபியைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் கூறினர்.
“கப்பலையும் அதனை வாங்குவதற்கான நிபந்தனைகளையும் உள்ளூர், அனைத்துலக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வேலைகள் எல்லாம் செய்து முடிக்கப்பட்டு விட்டன.
“வாங்குவோருக்கு பிரச்னை ஏதுமற்ற (கப்பலுக்கான) உரிமைப் பத்திரம் வழங்கப்படும். உண்மையான ஏலம் கேட்பவர்கள் மட்டுமே வர வேண்டும் என்பதற்காகத்தான் வைப்புத் தொகை”, என வழக்குரைஞர்கள் ஒங் சீ குவானும் ஜெரேமி ஜோசப்பும் கூறினர்.