நஸ்ரி பாரிசான் நேசனல் புதிய தலைமைச் செயலாளர்

 

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஸிஸ் பிஎன்-னின் புதியத் தலைமைச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த அறிவிப்பு இன்று பின்னேரத்தில் மஇகா பொதுக்கூட்டத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் பிஎன் தலைவர் அஹமட் ஸாடிட் ஹமிடி அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு ஒரு வலுவான எதிரணியை உருவாக்குவதற்குகான அதிகாரம் நஸ்ரிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்பு கொண்ட போது, தமக்கு தலைமைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது பற்றி சுமார் மூன்று மாதங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டதாக நஸ்ரி மலேசியாகினியிடம் கூறினார்.

நாங்கள் அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் இருந்ததால், அது குறித்து மக்களுக்குத் தெரிவித்துள்ளோம் என்றாரவர்.