கிம்மாவை பிஎன்-னில் சேர்த்துக்கொள்வது பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறார் ஹமிடி

 

பிஎன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கிம்மாவை (கோங்கிரஸ் இந்தியா முஸ்லிம்) பிஎன்-னில் சேர்த்துக்கொள்வது பற்றி ஆலோசிக்கப் போவதாக கூறினார்.

கிம்மாவைத் தவிர, இதர பிஎன் நட்புக் கட்சிகளை, மக்கள் சக்தி மற்றும் இந்திய முன்னேற்ற முன்னணி போன்றவை, பிஎன்-னில் சேர்த்துக்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்படும். அக்கட்சிகள் கூட்டணியில் சேர்வதற்கு மனு செய்துள்ளன என்றாரவர்.

அக்கட்சிகளை சேர்த்துக்கொள்வது பற்றி பெரும்பான்மையின் கருத்தைக் கவனத்தில் கொள்வேம் என்று அவர் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் செய்தி கூறுகிறது.

அம்மூன்று கட்சிகளும் இந்தியர்களைத் தளமாகக் கொண்டவை; அவை பிஎன் நட்புக் கட்சிகள். ஆனால் அவற்றை இதற்கு முன்பு பிஎன்-னில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை, ஏனென்றால் இன்னொரு இந்தியக் கட்சியான மஇகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இன்று, கிம்மாவின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸாகிட் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, கிம்மா தலைவர் சைட் இப்ராகிம் காதர் அவரது கட்சியை பிஎன்-னில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு தேர்தல் போட்டியிடுவதற்கு இரண்டு நாடாளுமன்ற இருக்கைகளும் நான்கு மாநில இருக்கைகளும் அக்கட்சிக்கு வேண்டும் என்றார்.