அம்னோவை விட்டு 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் வெளியேறக் கூடும், காடிர் ஜாசின் கூறுகிறார்

 

முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அம்னோ 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கக்கூடும் என்று எ. காடிர் ஜாசின் கூறுகிறார்.

40 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறக்கூடும் என்ற வதந்திகளை, பேச்சுகளை நான் கேட்டிருக்கிறேன். அதில் பலர் பெர்சத்துவில் சேரக்கூடும் என்று பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரான ஜாசின் மலேசியாகினியிடம் கூறினார்.

ஆனால், பெர்சத்துவில் சேர விரும்புகிறவர்கள் முதலில் சுயேட்சைகளாக சேவையாற்ற வேண்டும். அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவு செய்யும் உரிமை கட்சியிடம் இருக்கும் என்றாரவர்.

யார் வேண்டுமானாலும் கட்சியில் சேர்வதற்கு ஏற்றுகொள்ளப்பட மாட்டார்கள் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் நேற்றிரவு நடந்த பெர்சத்து உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜாசின், இது முறையான நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்ககமாக இல்லை. ஆனால், முஸ்தாபா பெர்சத்துவில் நுழைப்போவதை அறிவிப்பதற்கு தலைவர்கள் தயாராகிக் கொண்டிருக்கையில் இது பற்றி கூறப்பட்டது.

முன்னாள் அமைச்சரான முஸ்தாபா பெர்சத்துவில் சேருவதற்கான அவரது முடிவை நேற்றிரவு அறிவித்தார்.