சிலாங்கூர் பிகேஆர் தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதி வாக்களிப்பில் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரபிஸி சிலாங்கூரில் நிலவரம் அவரை எதிர்த்துப் போட்டியிடும் முகமட் அஸ்மின் அலிக்கு சாதமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார்.
சாதக நிலை 55/45-தாக இருக்கிறது, 55 அஸ்மினுக்கு சாதமாக இருக்கிறது என்று கூறிய ரபிஸி, நான் சிலாங்கூரில் தோல்வியை எதிர்பார்த்தேன் என்று பிகேஆர் பாண்டான் தொகுதி வாக்களிப்பு மையத்தில் அவர் கூறினார்.
தாம் 1,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு பெற்றிருப்பதை எதிர்பார்க்கவில்லை என்று கூறிய ரபிஸி, அஸ்மின் மாநில பிகேஆரின் தலைவராக 20 வருடங்களுக்கு இருந்ததோடு அவர் இம்மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாராகவும் இருந்திருக்கிறார் என்றார்.
சிலாங்கூர் மாநிலத்தைத் தவிர இதர மாநிலத்தில் தமக்கு இருக்கும் ஆதரவின் அடிப்படையில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சாபா மற்றும் சரவாக் மாநில பிகேஆர் தொகுதிகள் வாக்களிறிப்பில் தாம் அஸ்மினை முந்திச் செல்ல முடியும் என்று நம்புவதாக ரபிஸி மேலும் கூறினார்.