அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை, பக்காத்தான் ஹராப்பானில் சேர்த்துக்கொள்வது ‘ஆரோக்கிய’மானது அல்ல என டிஏபி தலைவர் தான் கொக் வாய் கூறினார்.
ஜெலி எம்பி முஸ்தாப்பா முகமட், பெர்சத்துவில் இணைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இன்னும் எத்தனை அம்னோ எம்பி-க்கள் ஹராப்பானில் – டிஏபி உட்பட – இணையவுள்ளனர் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
“இருப்பினும், நாங்கள் இதனை ஆதரிக்கவில்லை, கட்சி தாவுதல் ஓர் ஆரோக்கியமான நடைமுறை அல்ல, அதுவும் ஹராப்பான் 14-வது பொதுத் தேர்தலில் வென்று, ஆட்சி அமைத்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், இது சரியான நடவடிக்கை அல்ல,” என அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று, பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர், ஏ காடிர் ஜாசின், இன்னும் 40 அம்னோ எம்பி-க்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகக் கோடிகாட்டினார்.
அவர்கள் அனைவரும் பெர்சத்துவில் இணைய விரும்புவதாகவும், ஆனால் பெர்சத்து அவ்வளவு எளிதில் அவர்களை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.