ஜெலி எம்பி முஸ்தபா முகம்மட் பெர்சத்துவில் சேர்ந்தது பற்றிக் குறிப்பிட்ட கிளந்தான் சட்டமன்ற எதிரணித் தலைவர் முகம்மட் அல்வி சே அஹமட், “kusangka kau permata, rupanya kaca (வைரமென்று நினைத்தேனே கண்ணாடிக் கல்லானதே) என்று அங்கலாய்த்தார்.
இன்று கோட்டா பாருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முஸ்தபா ஏற்கனவே சித்திரிக்க்கப்பட்டதைப்போல் ஒரு ‘ஐகோன்’ அல்ல என்றார்.
“பிரச்னை என்னவென்றால் அவரை ஐகோன் ஆக்கி வைத்திருந்தோம். ஆனால், அவர் ஐகோன் அல்ல”, என்றாரவர்.
“அரசியலில் பகைமை என்பதில்லை. கருத்துவேறுபாடுகள் மட்டுமே உண்டு. அவர் (அம்னோவிலிருது வெளியேற நினைத்தார். அது அவருடைய விருப்பம்…. அதற்கு ஏதாவது காரணம் இருக்கும்”, என்றார்.
ஆயர் லானாஸ் சட்டமன்ற உறுப்பினரான முஸ்தபா இன்று காலை சட்டமன்றம் வராதது கண்டு ஏமாற்றமடைந்ததாக முகம்மட் அலி கூறினார்.
“வந்திருந்தால் (ஏன் வெளியேறினீர்கள் என்று) கேட்டிருக்கலாம்”, என்றார்.