ஷாபியின் அரசதந்திர கடப்பிதழ் இரத்து செய்யப்பட்டது

 

வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவின் அரசதந்திர கடப்பிதழை வெளியுறவு அமைச்சு கடந்த செப்டெம்பர் 19 இல் இரத்து விட்டது.

எழுத்து மூலமான நாடாளுமன்ற பதிலின்படி, ஷாபிக்கு இரு முறை, 2009 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், அரசதந்திர கடப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.

2009 ஆம் ஆண்டில், ஆசியான் மனித உரிமைகள் அரசாங்களுக்கிடையிலான ஆணையத்தின் மலேசியாவின் பிரதிநிதி என்ற தகுதியில் ஷாபிக்கு அந்த ஆவணம் வழங்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டில், மனித உரிமைகளுக்கான சுதந்திரமான தூதர் என்ற முறையில் அந்த ஆவணம் கொடுக்கப்பட்டது.

மலேசியப் பிரதிநிதி என்ற முறையில் ஷாபி அவரது கடமைகளை ஆற்றுவதற்காக அரசதந்திர கடப்பிதழ்கள் அவருக்கு வழங்கப்பட்டன என்று வெளியுறவு அமைச்சு கூறிற்று.

ஷாபி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்குரைஞர் என்ற முறையில் நன்கு பிரபல்யமானவர். நஜிப் பிரதமரான அதே ஆண்டில் ஷாபிக்கு அரசதந்திர கடப்பிதழ் கொடுக்கப்பட்டது.

கடந்த மாதம், ஷாபி மீது பணச் சலவை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது அரசதந்திர கடப்பிதழ் பற்றிய கேள்வி எழுந்தது.

சுதந்திரமான தூதர் என்ற முறையில் ஷாபி முதல் தர அரசு ஊழியராவார்.