கடந்த ஞாயிற்றுக்கிழமை தஞ்சோங் காராங் பிகேஆர் கிளைத் தேர்தல்களில் குழப்பம் விளைவித்ததன் தொடர்பில் போலீஸ் எழுவரை தடுத்து வைத்துள்ளது.
குழப்பம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் அவ் வெழுவரும் அதே நாளில் கைது செய்யப்பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் முகம்மட் அஸ்ரி அப்துல் வகாப்பை மேற்கோள்காட்டி த ஸ்டார் அறிவித்தது.
“பிற்பகல் மணி 3.30க்கு இரு தரப்புகளுக்கிடையில் வாக்குவாதம் மூண்டது.
“இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மிரட்டி கொண்டார்கள். ஆனால், ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. யாருக்கும் கடும் காயங்கள் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்படவில்லை”, என முகம்மட் அஸ்ரி கூறினார்.
அச்சம்பவம் தொடர்பில் நான்கு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. சந்தேகத்துக்குரிய எழுவரும் பின்னர் தாமே வந்து சரணடைந்தனர்..