பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் ஊழல் இருந்தால் பொதுமக்கள் அது குறித்து புகார் செய்வதை ஊக்குவிக்கிறார். ஊழல் குறித்து தகவல் அளிப்போருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்.
“இப்போது முந்தைய அரசாங்கத்தின் ஊழல்கள்மீதுதான் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், புதிய அரசில் ஊழல் நடப்பது தெரிந்தால் மக்கள் தெரிவிப்பதற்கு முன்வர வேண்டும்.
“…..ஊழல் குறித்து தகவலளிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் அளிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது” . இன்று கோலாலும்பூரில் ஊழல்தடுப்பு உச்சநிலை கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது மகாதிர் இவ்வாறு கூறினார்