முகைதின்: அல்தான்துயா கொலையில் நஜிப், ரோஸ்மா சம்பந்தப்பட்டிருந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்

 

மங்கோலியப் பெண் அல்தான்துயா கொலையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது துணவியார் ரோஸ்மா மன்சோர் சம்பந்தப்பட்டிருந்தால் போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

ராம்கர்பால் சிங் நேற்று போலீஸ் நஜிப்பையும் ரோஸ்மாவையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதற்கு பதில் அளித்த முகைதின் இவ்வாறு கூறினர்.

அல்தான்துயா பற்றி கம்பளி வணிகர் தீபாக் அவரது வீடியோ நேர்காணலில் கூறியிருந்தது நஜிப்பையும் ரோஸ்மாவையும் சம்பந்தப்படுத்துகிறது என்று ராம்கர்பால் கூறினார்.

தீபாக் கூறியிருந்தது ஒரு புதிய ஆதாரம் மற்றும் புதிய தகவலாகக் கருத்தப்பட்டால், அதற்கு உண்மையில் அடிப்படை இருந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய முகைதின், என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நாங்கள் ஓர் அறிக்கையைப் பெறுவதற்கு தீபாக்கிற்கு அழைப்பு விடலாம் என்றார்.

பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் உண்மையில் சம்பந்தப்பட்டிருந்தால், ஒரு விசாரணை தேவைப்படுகிறது. அதன்படி, போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று முகைதின் கூறினார்.