பொதுப் பல்கலைக்கழகங்களில் அரசியல் கட்சிகள் கிளைகளை அமைக்கலாம்

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் (யுயுசிஏ) திருத்தம் செய்யப்பட்டதும் அரசியல் கட்சிகள் பொதுப் பல்கலைக்கழகங்களில் கிளைகளை அமைக்க முடியும் எனக் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கூறினார்.

வாக்களிப்பு வயதை 18க்குக் குறைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதால் அதற்கேற்ப யுயுசிஏ-இலும் திருத்தம் செய்யப்பட விருப்பதாக அவர் சொன்னார்.

“யுயுசிஏ-இல் திருத்தங்கள் செய்யப்படுவதால் பொதுப் பல்கலைக்கழகங்களில் பாரிசான் நேசனல் பட்டதாரி மாணவர்கள் மன்றம் இருக்கும், பக்கத்தான் ஹரப்பான் மன்றம் இருக்கும் , பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து மன்றம் இருக்கும், மற்ற மன்றங்களும் இருக்கும் வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போன்று”, என மஸ்லி நேற்று மக்களையில் கூறினார்.