சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் பெர்சே முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு எதிராக அவதூறு குற்றம் புரிந்தது நிருபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், மரியாவுக்கு இழப்பீடாக ரிம300,000 கொடுக்க வேண்டும் என்று ஜமாலுக்கு உத்தரவிட்டது.
மேலும், ஜமால் செலவுத் தொகையாக ரிம40,000 கட்ட வேண்டும் என்றும் நீதிபதி முகமட் ஸாக்கி அப்துல் வஹாப் உத்தரவிட்டார்.
மரியாவை வழக்குரைஞர்கள் என். சுரேந்திரன் மற்றும் லத்தீபா கோயா ஆகியோர் பிரதிநிதித்தனர்.

























