தியோ: ஏராளமான எம்பிக்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர், ஆனால் எம்எசிசி வலைதளத்தில் அவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன

 

துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் தம்முடைய பெயர் எம்எசிசியின் அதிகாரப்பூர்வமான சொத்து பிரகடன வலைத்தளத்தில் விடுபட்டுள்ளது குறித்து திகைப்படைந்துள்ளதாக கூறினார்.

தம்முடைய சொத்து பிரகடனத்தை அக்டோபர் 16-இல் தாக்கல் செய்ததாக கூறிய தியோ, ஏன் தம்முடைய பெயர் விடுபட்டுள்ளது பற்றி கண்டறியும்படு தமது அலுவலகத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

பல எம்பிகளுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூலாய் எம்பியான அவர் மேலும் கூறினார்.

பக்கத்தான் ஹரப்பான் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை எம்எசிசி அதன் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இன்று பிற்பகல் மணி 2.30 அளவில் 51 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமான விபரங்களை எம்எசிசி வலைத்தளம் வெளியிட்டுள்ளது.

ஆனால், அதில் பாதிக்கு மேற்பட்ட அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சொத்துகளை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள்.

சுகாதார மற்றும் விவசாய அமைச்சர்கள் அவர்களுடைய சொத்து அறிவிப்பு பாரங்களைத் தாக்கல் செய்து விட்டனர் என்று அவர்களுடைய உதவியாளர்கள் கூறினர்.