2019 வரவு செலவுத் திட்டம் : அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு

இன்று பிற்பகல் 3.30 மணியளவில், 2019-ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கத்தின், முதல் வரவு செலவுத் திட்டம் பலரின் எதிர்பார்ப்புகளுக்கு இடமளித்துள்ளது.

பலர் இந்த வரவு செலவுத் திட்டத்தைப் பரபரப்பானதாகவும், சாத்தியமான ஒன்றாகவும் அமையும் என்றும் கருதுகின்றனர். அரசு ஊழியர்கள் எப்போதும் போல, தங்களுக்கு ஏதாவது ஊக்கத்தொகை மற்றும் ‘பரிசுகள்’ கிடைக்க வாய்ப்புள்ளதா என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

1.6 மில்லியன் அரசு ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் தொழிற்சங்கமான கியூபெக்ஸ், உயர்ந்துவரும் வாழ்வாதார செலவினங்களைச் சமாளிக்க, அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்க, அரசாங்கம் பரிசீலிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக, பிரதமரே, நிதியமைச்சர் பதவியிலும் இருந்து தாக்கல் செய்த வரவு செலவு திட்டத்தை, இவ்வாண்டு, நிதியமைச்சர், லிம் குவான் எங் தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரித்தா ஹரியான்