RM500-லிருந்து RM1,000 வரை வாழ்வாதார உதவிநிதி

2019 வரவு செலவு திட்டம் | 40 விழுக்காடு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை (பி.எஸ்.எச்.) வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடரும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

RM2,000 அல்லது அதற்கும் குறைந்த மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, RM1,000 உதவிதொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

“RM2,001 இலிருந்து RM3,000 வரையில் மாத வருமானம் பெறுபவர்களுக்கு RM750-உம், R3,001 இலிருந்து RM4,000 வரையில் பெறுபவர்களுக்கு RM500-உம் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

“18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு, கூடுதலாக, ஒருவருக்கு RM120 வீதம் வழங்கப்படும், ஆனால் அது நான்கு நபர்களுக்கு மட்டுமே,” என்றும் அவர் கூறினார்.