ஜாஹிட் : 2019 வரவு செலவுத் திட்டத்தில், ஏழைகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்

நேற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019 பட்ஜெட்டில், கிராமப்புறப் பகுதி மக்கள், குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள் போன்றோர் நேரடியாக பயனடையவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

“அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைகள், பொருட்களின் விலை உயர்ந்துவரும் இக்காலக்கட்டத்தில், அவர்கள் மீது அதிகக் கவனம் செலுத்துவது அவசியமானது,” என்று, இன்று பெர்லிஸ், பாடாங் பெசாரில் அம்னோ உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் ஊடகச் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹஸ்சான், உதவித் தலைவர் மஹ்ட்சீர் காலிட் மற்றும் காலிட் நோர்டின் ஆகியோரும் அவருடன் இருந்தனர்.

முன்னதாகப் பேசிய முகமட், 2019 பட்ஜெட் நியாயமானது அல்ல, காரணம் கிராமப்புற மக்களைக் கணக்கில் கொள்ளாமல், நகர்ப்புறவாசிகள் மீதே அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

-பெர்னாமா