அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமானத்தை மட்டுமே அறிவித்த, பக்காத்தான் ஹராபானின் நிர்வாக சொத்து பிரகடனத்தை, முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் இன்று விமர்சித்தார்
ஹராப்பான் சொத்துக்களை அறிவிப்பது உண்மை என்றால், அமைச்சர்கள் மற்றும் எம்பி-க்களின் பிள்ளைகளின் வருமானம் மற்றும் சொத்துக்களையும் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும் என்றார் அவர்.
“(சம்பளம்) அது நாடாளுமன்ற அறிக்கையிலும் வாசிக்கப்படுகிறது. எத்தனை ஆடம்பர கார்கள் உள்ளன, நாங்கள் அறிய விரும்புகிறோம்? எத்தனை குதிரைகள் உள்ளன?” என அவர் கோலாலம்பூர், புத்ரா உலக வாணிப மையத்தில், 1,000 ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசியபோது கேள்வி எழுப்பினார்.
நஜிப் ஒரு நண்பரிடமிருந்து 30 குதிரைகளை அன்பளிப்பாகப் பெற்றார், என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மகாதிர் சி.என்.என். நேர்காணலின் போது பேசியதை நஜிப் நினைவுகூர்ந்தார்.