மசீச தேர்தல் | ஆயேர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர், வீ கா சியோங், மசீச-வின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மசீச-வைப் பிரதிநிதித்து, நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் ஒரே தலைவர் வீ கா சியோங் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு தவணையாக, மசீச-வின் துணைத் தலைவராக இருந்த அவர், மும்முணைப் போட்டியில் வென்று, இன்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர் பதவிக்கு அவரை எதிர்த்து மசீச பெருவாஸ் தொகுதி இளைஞர் தலைவர், ங்கூ தெக் கியோங் மற்றும் மசீச குளுவாங் தொகுதி தலைவர் கான் பிங் சியூ இருவரும் போட்டியிட்டனர்.
வெற்றிபெற்ற பிறகு, மசீச தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது ‘சிறப்பு வாய்ந்தது’, மசீச புதியக் குழுவிற்கு ஊக்கமளிக்கும் ஒன்று என அவர் சொன்னார்.