’நன்கொடை’ பொய்தான் பிஎன் தோல்விக்குக் காரணம்: நஜிப்பைச் சாடுகிறது அம்னோ பத்திரிகை

தம் கணக்கிலிருந்த பணம் சவூதி அரசாங்கத்திடமிருந்து வந்த நன்கொடை என்று நெடுகிலும் கூறி வந்த நஜிப், இப்போது அது எங்கிருந்து வந்தது என்பது தமக்குத் தெரியாது என்றுரைத்திருப்பதன்வழி மலேசியர்களை, அதிலும் குறிப்பாக அம்னோ உறுப்பினர்களை ஏமாளிகளாக்கி விட்டார்”, என்று மிங்குவான் மலேசியா ஏடு சாடியுள்ளது.

நஜிப், அல் ஜசீராவு நேர்காணலில் தம் வங்கிக் கணக்குக்கு முதலில் சவூதி அராபியாவிருந்துதான் பணம் வந்தது என்றும் அதனால் அடுத்தடுத்து வந்த பணத்தையும் அங்கிருந்து வந்ததாகவே அனுமானித்துக் கொண்டதாகவும் கூறி இருந்தார்.

ஆனால், மலேசியா மற்றும் அனைத்துலக விசாரணையாளர்கள் அப்பணம் அரசாங்கத்துக்குச் சொந்தமான, பிரதமராகவும் நிதி அமைச்சருமாகவுமிருந்த நஜிப்பின் கண்காணிப்பில் இருந்த 1எம்டிபி நிறுவனத்திடமிருந்துதான் வந்ததாக நினைக்கிறார்கள்.

அது தானுர் நிதி கார்ப்பரேசனிலிருந்து வந்த பணம் என்ற உண்மை பல முறை வெளிப்படுத்தப்பட்டிருப்பதை உத்துசான் சுட்டிக்காட்டியது.

“முடிவில், அண்மையில் அல் ஜசீராவில் மே எண் ஜோல்லியுடனான நேர்காணலில் அவரின்(நஜிப்) பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டன”, என “ஆவாங் செலாமாட்” அச்செய்தித்தாளில் எழுதியிருந்தார்.

“பொய் சொல்லிய நஜிப் அம்னோ உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதான் பிஎன் தலைமைத்துவத்தின்மீது நம்பிககை இழக்கச் செய்து உறுப்புக் கட்சிகளின் ஆட்சி அதிகாரம் இழக்கவும் வழிகோலியது”, என்றாரவர்.