பிரதமர் அரசாங்க அதிகாரியா, இல்லையா? கூட்டரசு நீதிமன்றம் முடிவு செய்யும்

பிரதமர் என்பவர் அரசாங்க அதிகாரியா இல்லையா என்ற விவகாரத்துக்குக் கூட்டரசு நீதிமன்றம் முடிவு காணும்.

அவ்விவகாரத்தைக் கூட்டரசு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல டமன்சாரா எம்பி டோனி புவாவுக்குக் கூட்டரசு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கப் பணியில் இருந்தபோது செய்த அதிகார முறைகேடுகளுக்கு எதிராக டோனி புவா வழக்கு தொடுத்துள்ளார்.

தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலஞ்சோம், மலாயா தலைமை நீதிபதி ஜஹாரா இப்ராகிம், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி அலிஸாதுல் கைர் ஒத்மான் ஆகிய மூவரும் அந்த அனுமதியை வழங்கினர்.

இதற்குமுன், இவ்வழக்கு உயர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டபோது நஜிப் அரசாங்க அதிகாரி அல்ல என்று கூறி அது வழக்கைத் தள்ளுபடி செய்தது.