முன்னாள் சாபா முதல்வர் மூசா அமான் ஊழல் குற்றங்களுக்காக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாமே வெட்டுமரக் குத்தகை கொடுக்கப்பட்டதில் நிகழ்ந்த ஊழல்கள்.
அவர்மீது 35 ஊழல் குற்றங்கள் சுமத்தப்படும் என்று அரசாங்கத்துக்கு அணுக்கமான வட்டாரம் ஒன்று தெரிவித்தது. இந்த ஊழலில் மொத்தம் யுஎஸ்$63 மில்லியன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பணம் சிங்கப்பூர், ஹாங்காங் வங்கிகளில் போடப்பட்டுள்ளதாகவும் அது கூறிற்று.
சுங்கை சிபூகா சட்டமன்ற உறுப்பினரான மூசா இன்று காலை மணி 10.05க்கு புத்ரா ஜெயா எம்ஏசிசி தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி ஓர் அறிக்கையில் கூறியது.
“கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் இணக்கத்துடன் மூசா குற்றஞ்சாட்டப்பட விருக்கிறார்.
“மூசாவுக்கு எதிராக 1997 ஊழல்தடுப்புச் சட்டத்தின்கீழ் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்”, என அவ்வறிக்கை கூறியது.