சாபாவின் முதலமைச்சராக ஷாபி தொடரந்து நீடிக்கிறார், நீதிமன்றம் தீர்ப்பு

 

இன்று கோட்டா கின்னாபாலு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வாரிசான் கட்சித் தலைவர் ஷாபி அப்டால் சாபாவின் முதமைச்சராக தொடர்ந்து இருப்பார்.

ஷாபி முதலமைச்சராக மே 12 இல் நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து முன்னாள் முதலைமச்சர் மூசா அமான் சாபா யாங் டி-பெர்த்துவா நெகிரி ஜூஹார் மகிருடின் மற்றும் ஷாபிக்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கை நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தள்ளி வைத்தது.

போர்னியோ போஸ்ட்டின் செய்திப்படி, நீதிமன்றம் ஜூஹாருக்கும் ஷாபிக்கும் தொகையாக தலா ரிம15,,000 கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

தாமே சாபாவின் சட்டப்பூர்வமான முதலமைச்சர் என்று பிரகடனம் செய்யக் கோரும் மனுவை மூசா கடந்த ஜூன் மாதத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.