வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கூடுதல் நேரம் கோருகிறார் ரோஸ்மாவின் வழக்குரைஞர்

 

ரோஸ்மா சம்பந்தப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மனு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் தருமாறு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றதிடம் ரோஸ்மாவின் வழக்குரைஞர் கோரியுள்ளார்.

அரசுத் தரப்பு வழக்குரைஞரிடமிருந்து தாங்கள் 600 பக்க ஆவணங்களைப் பெற்றுள்ளதாகவும், ஆனால் தற்காப்புக் குழு வங்கி அறிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாக ரோஸ்மாவின் வழக்குரைஞர் கே. குமரேந்திரன் கூறினார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அஸுரா அல்வி, டிசம்பர் 6-ஐ வழக்கின் அடுத்த நாள் குறிப்பிடும் தேதியாக நிர்ணயித்தார்.