எம்.ஏ.சி.சி.யில் நஜிப் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைமையகத்தில் இன்று சுமார் 4 மணி நேரம் சாட்சியம் அளித்தார்.

அவரது மனைவி ரோஸ்மா மான்சோரின் வழக்கை, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவிமடுத்தப் பின்னர், காலை மணி 9.40 அளவில் எம்ஏசிசி தலைமையகம் வந்த நஜிப், மதியம் 1.50 மணியளவில் அவ்வளாகத்தை விட்டு வெளியேறினார்.

எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அஷாம் பாக்கி, நஜிப் இன்று சாட்சியம் அளிக்க எம்ஏசிசி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதை உறுதி செய்தார்.

சரவாக்கில், சூரிய ஆற்றல் பேனல்கள் நிறுவுதல் உட்பட, இன்னும் பல வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ, இன்று நஜிப்பை எம்ஏசிசி  அழைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.