டாக்டர் எம் : சீனர்கள் இல்லையென்றால் மலேசியா பின் தங்கிவிடும்

உள்ளூர் சீன சமூகம் வளர்ச்சியைக் கொண்டுவரவில்லை என்றால், மலேசியா பின் தங்கிய நாடாக இருக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

“சீனர்கள், சீனாவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை, உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், நீங்கள் அங்கு சீனர்கள் முகத்தைப் பார்க்கலாம்,” என்று மகாதீர் கூறியுள்ளார்.

“அவர்கள் பல நாடுகளின் வளர்ச்சிக்கு, நிறைய பங்களிப்பு செய்துள்ளார்கள், அந்த நாடுகளின் குடிமகன்களாகவும் இருக்கிறார்கள்,” என்று, உலக சீனப் பொருளாதார கருத்தரங்கில், இன்று சிறப்புரையாற்றிய போது மகாதீர் கூறினார்.

மலேசியாவில் 30 விழுக்காடு சீன நாட்டினர் இருக்கின்றனர், அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெறும் பங்காற்றியிருப்பதை மறுக்க முடியாது என்றார் அவர்.

“மலேசியாவின் வளர்ச்சிக்கான சீனாவின் பங்களிப்பை மலேசியா முழுமையாக மதிக்கின்றது, உண்மையில் அவர்கள் இல்லையென்றால், மலேசியா மேம்பாட்டில் பின் தங்கியிருக்கும் என நாங்கள் உணர்கிறோம்,” என்றார் அவர்.

“எங்கிருந்தாலும் செல்வத்தை உருவாக்கும் திறனை அவர்கள் பெற்றிருக்கிறார்கள், வியாபாரம் மற்றும் பணத்தை எவ்வாறு கையாள வேண்டும், தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

“வியாபாரிகளே செல்வத்தை உருவாக்குகிறார்கள், அரசாங்கம் அதைச் சேகரிக்கிறது.

“செல்வத்தை உருவாக்கும் வியாபாரிகள் இல்லாமல், அரசாங்கம் செல்வத்தை பெறமுடியாது,” என்று அவர் கூறினார்.