பட்ஜெட் 2019, பணக்காரர் – ஏழை இடைவெளி அதிகரிக்கும் என்று எம்.பி.எம். அச்சம்

2019 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளில், வர்க்க குழுக்களுக்கிடையில் இருக்கும் செல்வ இடைவெளியைக் கையாளும் விவகாரங்களைக் குறிப்பிட்டு சொல்லவில்லை, இதனால் பணக்காரர் – ஏழை இடைவெளி இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என மலாய் ஆலோசனைக் குழு (எம்பிஎம்) கவலை தெரிவித்துள்ளது.

11-வது மலேசியத் திட்டத்தின் இடைக்கால மறுஆய்வின் (KSP RMK11) தொடர்ச்சியாக, நவம்பர் 2-ம் திகதி, நிதியமைச்சர் லிம் குவான் எங் தாக்கல் செய்த பட்ஜெட் 2019, தொங்காக் II-ல் முன்மொழியப்பட்டுள்ள முதல் பகுதியைத் (உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்) தெளிவாக விவரிக்கவில்லை என எம்பிஎம்-இன் பொருளாதார ஆலோசனை நிபுணர் அக்பர் அலி தெரிவித்தார்.

“இதனால், இனக் குழுக்கள் இடையே, செல்வ இடைவெளியைக் குறைக்க வேண்டுமெனும் பிரதமரின் நோக்கத்தை அடைய முடியாது போகும் என்று அஞ்சுகிறேன்,” என்று அக்பர் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் 2019-இல் அறிவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் விற்பனையைக் குறிப்பிட்ட அவர், அவற்றுள் நான்கில் மூன்று வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துவதாகவும் போட்டித் தன்மையை ஊக்குவிப்பதாக இருப்பினும், அவை சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

திறம் குறைந்த நிறுவனங்களில் அரசாங்க முதலீட்டைக் குறைத்தல், நிலப் பரிமாற்ற பரிவர்த்தனைகள் மூலம் அரசு-தனியார் பங்காளித்துவத்தைச் (பொது-தனியார் பங்களிப்பு) செயல்படுத்துதல்; திட்டமிட்டு நிலங்களை விற்றல் ஆகியவை அவை மூன்றும் ஆகும்.

“திறந்த தெண்டர் முறைகள் சிறந்த ஒன்றாக இருக்க முடியாது, காரணம் அதிக இலாபம் கருதி ஒன்றைச் செய்யும், அது அனைவருக்கும் நியாயமானதாக இருக்கும் என்று உறுதியாக நம்ப முடியாது, குறிப்பாக அந்நியர்களுக்கு வெளிப்படையாக, அறிமுகமில்லாதத் துறைகளை நாம் திறந்துவிடும் போது. எனவே, நடைமுறைபடுத்தும் முன், போட்டிகள் நியாயமானதாகவும் சமமானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் மீதான நேரடி குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, நிதி அமைச்சர் நடைமுறை படுத்தப்படவுள்ள ‘விலக்கு’ முறைகள் பற்றிய உண்மையைத் தெளிவாக விளக்க வேண்டும். இந்நடைமுறைகள் இனங்களுக்கிடையிலான செல்வ இடைவெளியைக் குறைக்குமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தகுதிவாய்ந்த, திறன்மிக்க பூமிபுத்ராக்களுக்குச் சமமான, நியாயமான வழிமுறைகள் மூலம் வாய்ப்புகள் வழங்க வேண்டும், பினாமிகளுக்கு அல்ல என்றும் அக்பர் வலியுறுத்தினார்.

-பெர்னாமா