பேச்சைக் குறைத்துச் செயலைப் பெருக்குங்கள் -பக்கத்தான் அரசுக்கு ரபிடா அறிவுறுத்து

பக்கத்தான் அரசாங்கம் நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர பேச்சைக் குறைத்துச் செயலில் இறங்க வேண்டும் ரபிடா அசிஸ் கூறுகிறார்.

நாட்டை நிர்மாணிக்கும் மிகப் பெரிய பணி அரசாங்கத்துக்குக் காத்திருக்கிறது என முன்னாள் அனைத்துலக, வாணிக அமைச்சரான ரபிடா கூறினார்.

எடுத்ததற்கெல்லாம் 61ஆண்டுக் காலமாக நாட்டை ஆண்ட முன்னாள் அரசாங்கத்தையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது எனப் பெருமக்கள் மன்றத் தலைவர் டயிம் சைனுடின் கூறியதையே ரபிடாவும் வலியுறுத்தினார்.

பெர்சத்துவில் சேர்ந்துள்ள அவர் ஆற்றப்போகும் பங்கு குறித்து வினவியதற்கு அக்கட்சியிலிருந்துவாறே பக்கத்தான் அரசாங்கத்துக்கு படுபடப் போவதாக அவர் சொன்னார்.

“மற்றவர்கள் சேர்கிறார்கள் என்பதற்காக நான் இதில் சேரவில்லை.

“தனிப்பட்ட நோக்கத்துக்காக நான் எதையும் செய்வதில்லை.14வது பொதுத் தேர்தலின்போதே பக்கத்தான் வெற்றிக்கு என்னால் முடிந்ததைச் செய்து விட்டேன்”, என்றாரவர்.