அன்வார் : பிகேஆர் தேர்தல் அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டதற்கு, ‘அவசர நடவடிக்கை’யே காரணம்

பிகேஆர் தேர்தல் |  ஜூலாவ்’வில் நடந்த கட்சித் தேர்தலில், அவசர கதியான “சைபர் தாக்குதல்” குற்றச்சாட்டுகளே, பிகேஆர் தேர்தல் அதிகாரிகள் கைதாக வழிவகுத்தன எனப் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார்.

அந்த அதிகாரி ஜூலாவ்வில் மின் வாக்களிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட ‘தேப்லட்’ –ஐ உசுப்பினார் என, பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரஃபிஸி ரம்லி முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பிகேஆர் தலைவர் ஒருவர் போலிஸ்  புகார் செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

“அறியாமைக்கு மற்றொரு உதாரணம் உண்மையை ஒதுக்கி வைத்தது,” என அக்கைது தொடர்பாக, பி.கே.ஆர் தலைவர்களுக்கு அனுப்பியத் தனிப்பட்ட செய்தியில் அன்வார் தெரிவித்துள்ளார்.

அன்வாரின் கருத்துப்படி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), பிகேஆர் தலைமையகத்தில் அந்த அதிகாரிகளைக் கைது செய்ய அந்தப் புகார்தான் வழிவகுத்தது.

ஜூலாவ்வில் நடந்த சம்பவம் பற்றி, பிகேஆர் மத்தியத் தேர்தல் குழு போலிசில் புகாரளித்துள்ளது என அன்வார் மேலும் சொன்னார்.

“கட்சித் தலைவர்களும் ஆர்வர்களும் அமைதி காத்து, சிறந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன், அதற்காகதான் பத்திரிகைகளில் சற்றுமுன்னர் என்னுடைய அறிக்கையை வெளியிட்டேன்,” என்றார் அவர்.

போலிசார், எம்ஏசிசி மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விசாரணைகளைத் தொடரும்,” என்று அன்வார் தனது செய்தியில் தெரிவித்தார்.

“பலர் என்னைத் தலையிடுமாறு கேட்கிறார்கள், ஆனால், கட்சித் தேர்தலில் என்னால் தலையிட முடியாது,” என்று அன்வார் வலியுறுத்தினார்.