சரவாக்கில் முதல் சுற்று வாக்களிப்பில் அஸ்மின் வெற்றி

பிகேஆர் தேர்தல் |  சரவாக்கில் நடந்த முதல் சுற்று வாக்கெடுப்பில், ரஃபிஸி ரம்லியை விட, சற்று கூடுதல் வாக்குகள் பெற்று அஸ்மின் அலி முன்னணியில் இருக்கிறார்.

எனினும், அவரது வெற்றி, ‘இணையத் தாக்குதல்’களால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஜூலாவ் தேர்தல் முடிவுகளால் நடுநிலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த 21 தொகுதி தேர்தல்களில், அஸ்மின் 2, 848 வாக்குகளும் ரஃபிஸி 1,507 வாக்குகளும் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, கெனிங்காவ் மறுதேர்தலில் 3 வாக்குகள் பெரும்பான்மையில் ரஃபிஸி வெற்றியடைந்துள்ளார். ரஃபிஸிக்கு 624 வாக்குகளும் அஸ்மினுக்கு 621 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இந்த அதிகாரப்பூர்வமற்ற முடிவின்படி, அஸ்மினுக்குக் கிடைத்த மொத்த வாக்கு எண்ணிக்கை 62,418 மற்றும் ரஃபிஸிக்சி 57,759 ஆகும்.

இதன்வழி, அஸ்மின் 4,659 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னணியில் உள்ளார்.

மற்ற ஏழு கிளைகளில், நாளை வாக்களிப்பு நடைபெறும்.