சைபுடின்: பிகேஆர் தேசிய காங்கிரசில் 2,700 பேராளர்கள் கலந்துகொள்வர்

ஷா ஆலம், ஐடீல் கான்வென்ஷன் செண்டரில் (ஐடிசிசி), நவம்பர் 16-இலிருந்து 18வரை நடைபெறும் பிகேஆர் தேசிய காங்கிரசில் மொத்தம் 2,735 பேராளர்கள் கலந்து கொள்வார்கள்.

இதைத் தெரிவித்த பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அவர்கள் நாடு முழுவதுமுள்ள 217 தொகுதிகள் மற்றும் இளைஞர், மகளிர் பிரிவுகளின் பிரதிநிதிகளாவர் என்றார்.

“எங்களுக்கு 218 தொகுதிகள் உள்ளன. லாபிஸ் தொகுதி அதன் ஆண்டுக் கூட்டத்தை நடத்தத் தவறி விட்டது. அதனால், அது பேராளர்களை அனுப்பி வைக்க முடியாது”, என்று சைபுடின் பெட்டாலிங் ஜெயாவில் பெர்னாமாவிடம் கூறினார்.