பாலியல் தொல்லை வழக்கு: ஷஹிடான் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சரும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாஹிடான் காசிம், பதின்ம வயதினருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

ஆராவ் எம்பியான அவர் இன்று காலை கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டார். குற்றத்தை மறுத்து விசாரணை கோரிய அவரை நீதிமன்றம் ரிம25,000 பிணையிலும் இருவரின் உத்தரவாதத்தின் பேரிலும் விடுவித்தது.

சிறாருக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டம் 2017, பிரிவு 14(ஏ)இன்கீழ் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிமன்றம் அவரது கடப்பிதழை அவரே வைத்துக்கொள்ள அனுமதித்தது.

ஷாஹிடான் காலை மணி 8.20க்குக் கைத்தடியை ஊன்றியபடி நீதிமன்றம் வந்தார். அவரின் மனைவி உள்பட மூன்று பெண்களும் உடன் வந்தனர்.

அவரை வரவேற்க சுமார் 50 ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர்.