துணைப் பிரதமர்: மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்கு மட்டும் மரண தண்டனை கொடுக்கலாம்

மலேசிய நீதிமுறையில் மரண தண்டனையை வைத்துக்கொள்ளலாம்; வைத்துக்கொண்டு மனிதத்தன்மையற்ற கோடூரச் செயல் புரிவோருக்கு மட்டும் அத் தண்டனையைக் கொடுக்கலாம்.

“நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு” மனிதத்தன்மையற்ற கொடூரக் குற்றங்களுக்கு மட்டும் அதைக் கொடுக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசீஸ் வான் இஸ்மாயில் காலையில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

“கட்டாய மரண தண்டனையை இரத்துச் செய்யலாமா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் அது குற்றச்செயல்களையோ குற்றவாளிகளையோ தடுத்து நிறுத்துவதாக இல்லை.

“மறுபுறம் இப்படிப்பட்ட தண்டனைகளை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரக் குற்றம் புரிகிறார்களே அவர்களுக்குக் கொடுக்கலாம்”, என்றாரவர்.