எம்ஏசிசி ரோஸ்மா, கூ நான், ரிஸால் மன்சூர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்தது

எம்ஏசிசி சரவாக் கிராமப்புறப் பள்ளிகளுக்கான சூரிய சக்தித் திட்டம் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் அவரின் உதவியாளர் ரிஸால் மன்சூரையும் விசாரிக்க விருப்பதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

மேலும், கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் சம்பந்தப்பட்ட நில விற்பனை தொடர்பாக முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் அட்னான் மன்சூரும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறாராம்.

இத்தகவலை எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

ரிம1.25 பில்லியன் செலவில் சரவாக்கில் 369 கிராமப்புறப் பள்ளிகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உருவாக்கும் திட்டம் மீதான விசாரணை முடிப்பதற்கு எம்ஏசிசி தயாராகி வருவதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

“அவர் (ரோஸ்மா) இன்று கைது செய்யப்பட்டு நாளை (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்”, என்று அது கூறிற்று.