கு நான் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம் சாட்டப்படலாம்

 

செய்தி அறிக்கைகளின்படி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரை கைது செய்துள்ளது.

கு நான் என்றும் அழைக்கப்படும் தெங்கு அட்னான் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) சம்பந்தப்பட்ட நில விற்பனை குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக எம்எசிசி தலைமையகத்திற்கு இன்று மதியம் அழைக்கப்பட்டிருந்தார்.

தெங்கு அட்னான் எம்எசிசி தலைமையகத்திற்கு பிற்பகல் மணி சுமார் 3.15 அளவில் வந்து சேர்ந்தார். அங்கு அவர் கைது செய்யப்பட்டார் என்று ஒரு வட்டாரம் உத்துசா ஓன்லைனிடம் கூறிற்று.

புத்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மீது நாளை குற்றம் சாட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.