வெட்டுமர ஏற்றுமதி வருமானம் குறையும்- அமைச்சர்

2017-இல் ரிம23.21பில்லியனாக இருந்த மலேசிய வெட்டுமரப் பொருள்களின் ஏற்றுமதி வருமானம் சரிவு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதே காரணம் என்று மூலத் தொழில் அமைச்சர் தெரேசா கொக் கூறினார

அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான வர்த்தகச் சர்ச்சையால் உலக வணிகம் ஆட்டம் கண்டு வெட்டுமரம் உள்பட மூலப் பொருள்களுக்கான தேவை குறைந்துள்ளது என்றாரவர்.

“மூலப் பொருள்களின் விலை குறையும்போது பொருளாதாரம் சுணக்கமடைகிறது. மலேசியாவில் மட்டுமல்ல உலக முழுவதுமே இதே நிலைதான்.

“வருமானத்தில் சரிவு ஏற்படுவதைக் கண்டு ஆச்சரியமடையக் கூடாது”, என்று கொக், அனைத்துலக வெட்டுமரக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தபோது கூறினார்.