இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிஜில் பெலாஜாரான் மலேசியா(எஸ்பிஎம்) தேர்வில் பகாசா மலேசியா, கணிதம், சீனமொழித் தாள்கள் கசிந்து விட்டதாகக் கூறப்படுவதைக் கல்வி அமைச்சு மறுக்கிறது.
அது தொடர்பாக புகார்கள் பெற்றதை அடுத்து விசாரணைகள் நடத்தப்பட்டதாகக் கூறிய கல்வி அமைச்சின் தேர்வு வாரியம், மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய அவசியமிருக்காது என்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பொய்யான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டது.
2018 எஸ்பிஎம் தேர்வு நவம்பர் 13 தொடங்கி டிசம்பர் 13 வரை நடைபெறும்.