1எம்டிபி மீது நாடைபெற்றுவரும் விசாரணைகள் அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும் என்கிறார் துணை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் நூர் ரஷிட் இப்ராகிம்.
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் உள்பட பலரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையெல்லாம் தொகுத்து ஒரு விசாரணைக் கோப்பு தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அது தயாரானதும் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
“விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் சிறப்புக் குழு ஒவ்வொரு வாரமும் கூடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறது……விசாரணை சீராக சென்று கொண்டிருக்கிறது. விசாரணையை விரைவில் முடிக்க முயன்று கொன்டிருக்கிறோம்”, என்றவர் சொன்னார்.
1எம்டிபியுடன் தொடர்புள்ள பல தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும்கூட விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகக் அவர் கூறினார்.