ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் ரபிசி ரம்லியை வேட்பாளராகக் களமிறக்குவது பற்றி பரிசீலிக்கப்படுவதை கேஆர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தினார்.
“ஆம், ரபிசியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது”, என அன்வார் 13வது பிகேஆர் காங்கிரஸ் நடைபெறும் ஷா ஆலம் ஐடீல் மாநாட்டு மண்டபத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இடைத் தேர்தலுக்கு ரபிசி ஒரு நல்ல வேட்பாளராக இருப்பாரே என்று குறிப்பிடப்பட்டதற்கு அன்வார் அவ்வாறு கூறினார்.
முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் என்ன அதற்கும் மேலான பதவி வகிக்கும் தகுதியும் ரபிசிக்கு உண்டு என்று அன்வார் கூற, அவரை இடைமறித்த பிகேஆர் தலைவரும் அவரின் துணைவியாருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தாமும் முன்னாள் காஜாங் சட்டமன்ற உறுப்பினர்தான் என்று கூறினார்.
நேற்று ரபிசியை வினவியதற்கு, அவர் தாம் ரந்தாவ் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுவதை மறுத்தார். அது கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் ஆதரவாளர்களால் பரப்பப்படும் “பொய்” என்றார்.
பிகேஆர் ரந்தாவில் மீண்டும் டாக்டர் ஸ்ரீராமைக் களமிறக்குவதே முறையாகும் என்றாரவர்.