பிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்

துணைப் பிரதமர், டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக, பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவராக, அன்வார் இப்ராஹிம் இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிகேஆர் மத்தியத் தேர்தல் ஆணையத் (ஜேபிபி) தலைவர், ரஷிட் டின், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சருமான, அஸ்மின் அலி தனது துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்து கொண்டார்.

கட்சியின் உதவித் தலைவர்கள் பதவிக்கு, பெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார், நீர், நில, இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், வீட்டுவசதி மற்றும் உள்துறை அமைச்சர் ஷுரைய்டா கமாருட்டின் மற்றும் பத்து நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்பி தியான் சுவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்பதவிக்கு ஷுரைய்டா புதிய முகமாவார். இதற்கு முன்பு அவர் பிகேஆரின் மகளிர் தலைவராக இருந்தார். ஆனால், இம்முறை அவர் அப்பதவியைத் தற்காத்து கொள்ளவில்லை.

மேலும், இளைஞர் பிரிவு தலைவராக அக்மால் நசீர், இளைஞர் பிரிவுத் துணைத் தலைவராக ஹில்மான் இடாம், மகளிர் தலைவியாக ஹனிஸா தல்ஹா, மகளிர் துணைத் தலைவியாக டரோயா அல்வியோடு, செயலவை உறுப்பினர்களாக எலிசபெத் வோங், அமீருட்டின் ஷாரி, குமார் அப்பலநாயுடு, லேரி சூன், சிவராசா இராசையா, ஜலேஹா முஸ்தாஃபா உட்பட 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.