பினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில் தோற்கடிக்கப்பட்டனர்

பினாங்கு மாநில டிஎபி தேர்தலில் மாநில துணை முதலமைச்சர்  பி. இராமசாமியும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கிர் ஜோஹாரியும் தோற்கடிக்கப்பட்டனர்.

ஆயினும், அவர்கள் இருவரும் பினாங்கு டிஎபியின் புதிய தலைமைத்துவத்தின் உறுப்பினர்களாக மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் இது ஒரு கடுமையான பின்னடைவாகும். 2015 ஆம் ஆண்டு மாநில டிஎபி தேர்தலில் ஸைரில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இராமசாமி ஆறாவது இடத்தில் இருந்தார்.

ஆனால், இப்போது அவர்கள் இருவரும் 15 பேருக்கான குழு உறுப்பினர் போட்டியில் வெற்றி பெற தவறி விட்டனர்.

மாநில 20 உறுப்பினர்கள் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களுடன் இன்னும் ஐவர், வழக்கமாக தோற்கடிக்கப்பட்டவர்களிலிருந்து, நியமிக்கப்படுவர். இதன் அடிப்படையில் இராமசாமியும் ஸைரிலும் மாநிலக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பினாங்கு மாநில டிஎபி குழு உறுப்பினர்கள்:

தலைவர்: சோ கோன் இயோவ்.

துணைத் தலைவர்: ஜக்டீப் சிங்

உதவித் தலைவர் 1: பி. இராமசாமி (நியமனம்)

உதவித் தலைவர் 2 : ஸைரில் கிர் ஜொஹாரி (நியமனம்)

செயலாளர்: லிம் ஹூய் இங்

உதவித் செயலாளர்: இயோ சூன் ஹின்

பொருளாளர்: வோங் ஹோன் வாய்

உதவிப் பொருளாளர்: லா ஹெங் கியாங்

மற்ற இதர பொறுப்புகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டும் நியமிக்கப்பட்டும் உள்ளனர்.