எம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்

 

முன்னாள் பிரதமர் நஜிப் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு மீண்டும் வந்துள்ளார்.

சரவாக் பள்ளிகளுக்கு சூரிய ஒளி மின் தட்டுகள் பொருத்துவது பற்றிய புலன்விசாரணைகளுக்கு உதவுவதற்காக நஜிப் அங்கு வந்திருப்பதாக நம்பப்படுகிறது.

அவர் பயனித்த கார் காலை மணி 9.23 அளவில் போலீஸ் வண்டி துணையுடன் எம்எசிசி தலைமையகத்தினுல் நுழைவது காணப்பட்டது.

நஜிப் எம்எசிசி தலைமையகத்திற்கு பல தடவைகளில் வந்துள்ளார். கடைசியாக வந்தது நவம்பர் 8-இல்.

கடந்த வியாழக்கிழமை, நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீது இரு ஆண்டுகளுக்கு முன்னர் சரவாக்கில் 369 கிராமப்புற பள்ளிகளுக்கு சூரிய ஒளி மின் தட்டுகள் பொருத்தும் திட்டத்தில் ரிம1.5 மில்லியன் ஊழல் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நஜிப்பின் முன்னாள் உதவியாளர் ரிஸால் மன்சோர் மீதும் இதே திட்டத்தில் ரோஸ்மாவுக்கும் தமக்கும் ரிம5.5 மில்லியன் இலஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

-பெர்னாமா